
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மனைவி மற்றும் மகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் (55). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மரியா லூர்தியா(53). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி இரவு மரிய லூர்தியாவும், அவரது மகள் லூர்துமேரியும் வீட்டில் படுத்திருந்த நிலையில் அவர்களது உடலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், கண்டு இருவரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு மற்றொரு அறையில் படுத்திருந்த மகன் பெட்ரோவும், தந்தை ஆரோக்கியநாதனும் தீயை அணைத்து கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லூர்துமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மரிய லூர்தியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க;- ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாஜிஸ்திரேட்டிடம் மரிய லூர்தியா அளிதத்தத வாக்குமூலத்தில் அவரது உடலில் தீ பிடிப்பதற்கு முன்பு எங்கள் மேல் மீது பெட்ரோல், டீசல் தெளிக்கப்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கொலை முயற்சி சம்பவம் நடத்திருப்பதை போலீசார் உறுதி செய்ததனர். இதனையடுத்து, ஆரோக்கியநாதனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, ஆரோக்கியநாதனை போலீசார் கை செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- ஆரோக்கியநாதன் கடந்த 10 ஆண்டுகளாக மூலக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து கள்ளக்காதலை மனைவி கண்டித்துள்ளார். இதனால், அடிக்கடி இருவரும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க;- ஒர்க் ஷாப் வேலைக்கு வந்த 22 வயது இளைஞரை மடக்கிய ஓனரின் மனைவி.. தடையாக இருந்த புருஷனை போட்டு தள்ளிய கொடூரம்.!
இதனால் மனைவியை தீர்த்துக்கட்ட ஆரோக்கியநாதன் திட்டமிட்டார். இதற்காக சம்பத்தன்று அதிகாலையில் எழுந்து பெற்றோரை தனது மனைவி மீது தெளித்துள்ளார். அப்போது மின்விளக்கு அணைக்கப்பட்டிருந்த நிலையில் பெட்ரோல் துளிகள் லூர்திமேரி மீதும் பட்டுள்ளது. பின்னர் ஆரோக்கியநாதன் தீயை பற்ற வைத்ததும் தாய், மகள் இரண்டு பேரும் எறிய துவங்கியுள்ளனர். பின்னர், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு லூர்துமேரி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனையடுத்து ஆரோக்கியநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீசார் கலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- மச்சினிச்சியை மடக்கிய அக்கா புருஷன்.. லாட்ஜில் ரூம் போட்டு செய்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன ஊழியர்.!