சுதாவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை செல்வராஜ் கண்டித்ததால், அவருக்கும், சுதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை தட்டிகேட்டதால் முதல் கள்ளக்காதலனை துடிதுடிக்க கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த திடுமல் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(50). விவசாயி. இவர் இரண்டு கார்களை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி கலாமணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், செல்வராஜ் பரமத்திவேலூரை அடுத்த கோலாரம் பாலக்கரை பகுதியில் சுதா(45) என்பவரது வீட்டில் இறந்து கிடப்பதாக, அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க;- கும்பகோணத்தில் ஆணவக் கொலை? திருமணமான 5ம் நாளில் விருந்துக்கு வீட்டுக்கு அழைத்து காதல் தம்பதி வெட்டி படுகொலை.!
இதனையடுத்து, மனைவி அலறியடித்துக்கொண்டு உறவினருடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, செல்வராஜ் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து, நல்லூர் காவல் நிலையத்தில் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுதா என்பவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலையுண்ட செல்வராஜூக்கும், சுதாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சுதாவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை செல்வராஜ் கண்டித்ததால், அவருக்கும், சுதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க;- மட்டையாகும் அளவிற்கு சரக்கை ஊத்தி கொடுத்த மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்..!
இதனால் விரக்தி அடைந்த சுதா ஓயாமல் தொந்தரவு செய்யும் செல்வராஜை போட்டு தள்ள முடிவு செய்தார். இதையடுத்து, தனது வீட்டிற்கு வந்த செல்வராஜூக்கு, அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி குடிக்கக் கொடுத்துள்ளார். போதை தலைக்கு ஏறியதும், தனது புடவையால், அவரது கழுத்தை இறுக்கி, கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சுதாவை கைது செய்த போலீசார், பரமத்தி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணல மார்க்ல கைவச்சிடுவேன்.. பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த HM..!