ஹோட்டல் அறையில் ரூம் எடுத்த ஜோடி.. ரகசிய கேமராவில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் - அடுத்து என்ன நடந்தது?

Published : Oct 22, 2022, 11:19 PM IST
ஹோட்டல் அறையில் ரூம் எடுத்த ஜோடி.. ரகசிய கேமராவில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் - அடுத்து என்ன நடந்தது?

சுருக்கம்

ரகசிய கேமரா மூலம் ஹோட்டலில் தங்கியிருந்த தம்பதியின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வெளியிடப்போவதாகவும், பணம் தரவில்லை என்றால் காட்சிகளை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டி கும்பல் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்த இக்கும்பல், அங்கு தங்கியிருந்து ரகசிய கேமராவை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

சில நாட்களுக்குப் பிறகு, அந்த குழு மீண்டும் அறை எடுத்து கேமராவை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஹோட்டல் ஊழியர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார் மற்றும் அனுராக் குமார் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

நால்வரும் நொய்டாவின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். 11 மடிக்கணினிகள், 21 மொபைல் போன்கள், 22 ஏ.டி.எம் கார்டுகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் சட்டவிரோத கால் சென்டர்களை நடத்தி வந்ததும், போலியான சிம் கார்டுகளை தயாரித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!