தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு.. இந்திய கடற்படை மீது கொலை முயற்சி வழக்கு.. மரைன் போலீஸ் ஆக்ஷன்...

By Ezhilarasan Babu  |  First Published Oct 22, 2022, 2:15 PM IST

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார் தமிழக மீனவர் மீது துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை மீது வேதாரண்யம் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார் தமிழக மீனவர் மீது துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை மீது வேதாரண்யம் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படகின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காரைக்கால் துறைமுகம் பகுதியை சேர்ந்த வீரவேல், செல்லதுரை, கண்ணன்,  மோகன்ராஜ், விக்னேஸ்வரன்,  மகேந்திரன் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த 16ஆம் தேதி மயிலாடுதுறையை சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் அக்டோபர் 21 அன்று அதிகாலை 2 மணி அளவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை சந்தேகத்தின் பேரில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் வீரவேல் பலத்த காயம் அடைந்தார். 5க்கும் மேற்பட்ட குண்டுகள் அவரது உடலில் பாய்ந்தது.

Tap to resize

Latest Videos

இதையும் பணியுங்கள்: 48 மணிநேரம் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம்.. வேலை முடிந்ததும் அந்தரங்க உறுப்பில் இரும்பு ராடு?

பால்க் வளைகுடாவில்  சந்தேகத்துக்கு இடமாக முறையில் இருந்த படகை நிறுத்தச் சொல்லி எச்சரித்தும், அப்படகு நிற்காமல சென்றதால் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கடற்படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் தமிழக மீனவர்கள் என்பதை அறிந்தவுடன் இந்திய கடற்படை உடனடியாக அருகில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு தகவல் அளித்ததுடன், காயமடைந்த மீனவரை விமானம் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த வீரவேல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் பணியுங்கள்: சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை.. கூட இருந்த நண்பனே செய்த பயங்கரம்.. வெளியான பகீர் காரணம்.!

மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், இந்திய கடற்படையினரின் பெயரால் நடந்த இந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. ஏற்கனவே இலங்கை மீனவர்களால் மிக மோசமாக தமிழக மீனவர்கள் நடத்தப்படுவதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் நமது பாதுகாப்பு படையினர் இது போன்ற செயலில் ஈடுபட்டு இருப்பது ஏற்கனவே காயத்தில் இருக்கும் மீனவர்களின் மனதில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது, பாதுகாப்பின்மை  உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தில் நீங்கள்  தலையிட வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில்தான் படகு உரிமையாளர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் வேதாரணியம் மரைன் போலீசார் இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி,  பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 

click me!