
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பிகளை செலுத்தி சித்தரவதை செய்து காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் கடந்த 16-ம் தேதி பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு டெல்லி செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காரில் கடத்தி சென்றனர். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இரண்டு நாள் வைத்து மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க;- சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை.. கூட இருந்த நண்பனே செய்த பயங்கரம்.. வெளியான பகீர் காரணம்.!
இரண்டு நாள்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 17ம் தேதி மாலை பெண்ணை சாக்கு பையில் வைத்து கட்டி சாலையில் வீசி சென்றுள்ளனர். இதுதொடர்பாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மயக்கத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடத்தி சென்ற நபர்கள் பெண்ணை கடுமையாக சித்ரவதை செய்தது மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையில் பரம்பரை சொத்து தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபர்களுக்கும் நீண்ட கால தகராறு இருந்துள்ளது. இதை மனதில் வைத்து பழி தீர்க்கவே கூட்டு பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பிகளை செலுத்தி சித்தரவதை செய்தும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் டெல்லி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல்! புருஷன், பசங்களை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் நிலைமையை பார்த்தீங்களா.?