மயக்க ஊசி போட்டார்... கற்பழித்து வீடியோ எடுத்தார்! கதிர்காமுவின் அந்தரங்க லீலையை வெளியிட்ட பெண்!

By sathish kFirst Published Apr 11, 2019, 9:06 AM IST
Highlights

பெண் புகாரில் பெரியகுளம் சட்டசபை தொகுதி அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு மீது உல்லாசமாக இருந்து வீடியோ போட்டோ எடுத்து பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், ஏமாற்றியது,  ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பெண் புகாரில் பெரியகுளம் சட்டசபை தொகுதி அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு மீது உல்லாசமாக இருந்து வீடியோ போட்டோ எடுத்து பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், ஏமாற்றியது,  ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வராக இருந்தவர் கதிர்காமு. அதிமுகவில் போட்டியிட்டு பெரியகுளம் எம்.எல்.ஏ ஆனார். தினகரனுக்கு ஆதரவு அளித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் மீது பெரியகுளம் சருத்துப்பட்டியை சேர்ந்த 36 வயதான பெண், பாஸ்கரன் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். 

இது குறித்து அந்த பெண் கொடுத்த புகார் மனுவில்: எனது தந்தைக்கு கால்வலிக்காக அல்லிநகரத்தில் உள்ள டாக்டர் கதிர்காமுவின் கிளினிக்குக்கு சென்றேன். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். நான் உடனிருந்தேன். கடந்த 2015 ஆகஸ்ட் 14 பகல் 2:00 மணிக்கு எனது முழங்காலில் வலி ஏற்பட்டது. அதனால் எனக்கு கதிர்காமு மயக்க ஊசி போட்டார். சில நிமிடங்களில் நான் மயங்கினேன். ஒரு மணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது பார்த்தபோது, நான் உடம்பில் துணியே இல்லாத நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது.

அப்போது, உன்னை பிடித்திருக்கிறது. உன்னையும், உன் குடும்பத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நானும் நீயும் இருப்பதை வீடியோ,  போட்டோ எடுத்துள்ளேன். நீ, எனக்கு இணங்க மறுத்தால் அதை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். 

நானும் எவ்வளோவோ கெஞ்சினேன் விடவில்லை, அதன் பிறகு 2017 மே 7 ல் அவரை தொடர்பு கொண்டு வீடியோ, போட்டோக்களை கொடுத்துவிடுங்கள்  என கெஞ்சினேன். அவரும் என்னை எம்எல்ஏ, அலுவலகம் வரச் சொன்னார். அங்கு சென்றேன். அப்போது அங்கு அவருடன் கட்சியின் முக்கிய விஐபி ஒருவர் உள்ளிட்ட 3 பேர் இருந்தனர். அவர்கள் சென்றவுடன், கதிர்காமுவிடம் வீடியோ, போட்டோக்களை கேட்டேன். அதற்கு, அந்த விஐபி உன் மீது ஆசைப்படுகிறார். அவருடன் நீ உல்லாசமாக இருக்கவேண்டும் இரு. அதற்கு நீ மறுத்தால் உன்னை குடும்பத்தோடு கொளுத்தாமல் விட மாட்டேன் என்று மிரட்டினார். அதனால் எனது மானத்திற்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

எனக்கு பாதுகாப்பு அளித்து கதிர்காமுவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குமகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா, ஏமாற்றி மோசடி செய்வது, ஆயுதமில்லாமல் கொலை மிரட்டல் விடுவது, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கதிர்காமு மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். கதிர்காமு பிரசாரத்தை நிறுத்திவிட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் மனு செய்துள்ளார். 

click me!