வயசு ஏறிட்டே போகுது... திருமணம் செய்து வைக்காத விரக்தியில் பாட்டியை அடித்துக் கொன்ற பேத்தி!

By SG Balan  |  First Published Jun 30, 2024, 4:50 PM IST

சிவசத்யா பக்கத்து வீட்டில் இருந்த தாய் புஷ்பவள்ளியிடம் சென்று பாட்டியைக் கொன்றுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். பதறி அடித்துக்கொண்டு வீடுக்கு ஓடிவந்த புஷ்பவள்ளி தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தியின் மனைவி தனலட்சுமி (வயது 70). இவரது மகன் பன்னீர்செல்வம். இவரது மனைவி புஷ்பவல்லி. இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

தனலெட்சுமியின் மகன் பன்னீர்செல்வம் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். பேரன் சிவக்குமார் 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். முதல் பேத்தி சிவரஞ்சனி திருமணமாகி கருவேபிலங்குறிச்சியில் வசிக்கிறார். 25  வயதான சிவசத்யாவுக்குத் திருமணமாகாததால் தாய் புஷ்பவள்ளி மற்றும் பாட்டி தனலட்சுமியுடன் வசித்து வந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

சிவக்குமார் இறந்துபோனதும் சிவசத்யாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் கடந்த சில நாட்களாக சிவசத்யா ஏன் இன்னும் தனக்குத் திருமணம் செய்துவைக்கவில்லை என பாட்டி தனலட்சுமியிடம் வாக்குவாதம் செய்துவந்துள்ளார்.

ஆசையாக ரெண்டு நாவல் பழத்தை எடுத்துத் தின்ற சிறுவன்... ஈவு இரக்கம் இல்லாமல் அடித்துக் கொன்ற மாமன்!

இந்நிலையில் சனிக்கிழமை மாலை சிவசத்யாவும் பாட்டியும் வீட்டில் தனியாக இருந்தபோது இவருக்கும் மீண்டும் வாக்குவாதம் மூண்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த சிவசத்யா, அருகில் இருந்த இரும்புக்கம்பி ஒன்றை எடுத்து பாட்டி தனலட்சுமியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். சிவசத்யாவின் கொடூரத் தாக்குதலில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

பின் சிவசத்யா பக்கத்து வீட்டில் இருந்த தாய் புஷ்பவள்ளியிடம் சென்று பாட்டியைக் கொன்றுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். பதறி அடித்துக்கொண்டு வீடுக்கு ஓடிவந்த புஷ்பவள்ளி தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த கருவேபிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, தனலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் சிவசத்யாவிடம் விசாரிக்க முயன்றபோது, "நான் தான் பாட்டியைக் கொன்றேன். யாராவது என் பக்கத்தில் வந்தால் தற்கொலை செய்துகொள்வேன்" என மிரட்டியுள்ளார்.

இதனால், போலீசார் சிவசத்யாவை கைது செய்யாமல் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதுகுறித்து, கருவேபிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் பாட்டியை பேத்தியே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த ஊரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டால இப்படியும் ஒரு யூஸ் இருக்கா... 18 வருஷத்துக்கு முன் பிரிஞ்சவங்க ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

click me!