ரகசிய தகவல் கொடுத்த இன்பார்மர்! போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 4 பேர் கைது! இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jun 30, 2024, 12:45 PM IST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அருகே போதை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜிப்மர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.


புதுச்சேரியில் போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த போதை பொருட்களும் பறிமுதல் செய்துள்ளனர். 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அருகே போதை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜிப்மர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். 

Latest Videos

undefined

இதனையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சேலம் எருமபாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த சங்கீத குமார்( 27) மற்றும் சேலம் கருப்பூரை சேர்ந்த கீர்த்தி வாசன் (22) என்பது தெரியவந்தது.  அவர்களை சோதனை செய்த போது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் கோரிமேடு அருகே தங்கி போதை ஸ்டாம்ப் விற்பனை செய்யும் கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஹைதர்(30) மற்றும் கண்ணூரை சேர்ந்த முகமது பாசில்(27) ஆகியவரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தனர்.

 இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1600 போதை ஸ்டாம்ப், 250 கிராம் கஞ்சா, 150 மில்லி 15  கஞ்சா ஆயில் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு  25 லட்ச ரூபாய் ஆகும். அவர்கள் போதை ஸ்டாம்ப் ஒவ்வொன்றும் 1500 முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததும் விசாரணைகள் தெரியவந்தது.  இதனையடுத்து நான்கு பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு  காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

click me!