நாவல் பழம் திருடியதாக சிறுவனை இரக்கமின்றி கொன்ற சிறுவனின் மாமா ராஜேஸ்வர் மஹ்தோவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் டால்டோங்கஞ்ச் பகுதியில் நாவல் பழத்தைத் திருடியதாகக் குற்றம்சாட்டி சிறுவனைத் தாக்கிக் கொன்ற நபரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் வியாழன் மதியம் நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். பாண்டு காவல் நிலையத்திற்குட்பட்ட லோயர் பாண்டு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பத்தில் தாக்கப்பட்ட சிறுவன் அங்கித் மேத்தாவை வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் டால்டோங்கஞ்சில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் சிறுவனைப் பரிசோதித்துவிட்டு ஏற்கெனவே இறந்துபோய்விட்டதாகக் கூறிவிட்டனர்.
undefined
நாவல் பழம் திருடியதாக சிறுவனை இரக்கமின்றி கொன்ற சிறுவனின் மாமா ராஜேஸ்வர் மஹ்தோவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
புலம்பெயர்ந்த இந்தியர்கள் உலக நாடுகளில் கொத்தடிமைகளாக மாறியது ஏன்?
இன்னொரு பயங்கரம்:
இதேபோன்ற மற்றொரு பயங்கர சம்பவமும் வியாழக்கிழமை அதே பகுதியில் நடந்துள்ளது. மனநலம் குன்றிய நபர் ஒருவர் தனது உறவினரான ரேகாதேவியை கொன்றுவிட்டு அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் தாக்கியுள்ளார். குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
“குழந்தையின் கழுத்து மற்றும் தோள்பட்டைக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரத்தப்போக்கு நின்றுவிட்டது. தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்குகிறோம்" என குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கவுரவ் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாண்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் ஒருவர் கூறுகையில், “தாக்கிய நபர் உபேந்தர் விஸ்வகர்மா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் ரேகா தேவியை அடித்துக் கொன்றுள்ளார். பிறகு குழந்தையும் தாக்கியுள்ளார்" என்கிறார்.