கடந்த 21ம் தேதி வழக்கம் போல காலை வேலைக்கு சென்ற வைஜெயந்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மதுரையில் காணாமல் போன பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக அவரது கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலசக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (31). இவரது மனைவி வைஜெயந்தி (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வைஜெயந்தி கட்டுமானப் பணியில் சித்தாளக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி வழக்கம் போல காலை வேலைக்கு சென்ற வைஜெயந்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என கணவர் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
இதையும் படிங்க: கெஞ்சிய காதலன்! இறங்கி வந்து ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பிய பள்ளி மாணவி! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இதனிடையே மதுரை விரகனூர் அருகே வைகையாற்று பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது ரவிசங்கரின் மனைவி வைஜெயந்தியின் உடல் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் வைஜெயந்தியில் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது சந்தேகத்தின் பேரில் சிவகங்கை மாவட்டம் பிஷர்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா(45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கருப்பையா தனது நண்பர் ஜெயகாந்தனுடன் சேர்ந்து வைஜெயந்தியை மணலூர் வைகை ஆற்றில் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்: கட்டட கட்டுமானப் பணியில் கருப்பையா கொத்தனாராக வேலை பாா்த்து வந்ததால் அவரிடம் வைஜெயந்தி சித்தாளாக பணியாற்றி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் வைஜெயந்தி கருப்பையாவை தவிர்த்து வந்துள்ளார். இதனால், வைஜெயந்தி வேறு யாருடனோ பழகுவதாக கருப்பையாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: காட்டுப்பகுதியில் மருமகள் கல்லூரி மாணவனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மாமியார்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
எனவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கருப்பையா தனது நண்பரான ஜெயகாந்தனுடன் சேர்ந்து வைஜெயந்தியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 21-ம் தேதி இரவு வைகை ஆற்றுக்கு வரவழைத்து கருப்பையாவும், ஜெயகாந்தனும் சேர்ந்து அவரை கொலை செய்து உடலை எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.