கூலிப்படை தலைவனும் பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்! நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jun 28, 2024, 1:57 PM IST

கோவையில் ஒரே நேரத்தில் 3 பேரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்  5 கொலைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களிலும் நிலுவையில் இருந்து வருகிறது. 


கூலிப்படை கும்பலின் தலைவனும் பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் 3 பேரை சீர்காழி சத்யா ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் மீது 5 கொலைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் 2021ம்ஆண்டு முன்னாள் அமைச்சர நயினார் நாகேந்திரன் மற்றும் வினோத் ஜி செல்வம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சத்யா உட்படுத்தப்பட்டவர்.

Latest Videos

undefined

இதையும் படிங்க: வேலைக்கு வந்த சித்தாளை கரெக்ட் செய்து உல்லாசம்.. கழற்றிவிட நினைத்ததால் ஆத்திரத்தில் மேஸ்திரி செய்த காரியம்!

இந்நிலையில் தொழிலதிபரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக சீர்காழி சத்யா புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் காரில் வந்த சீர்காழி சத்யாவை மடக்கி பிடிக்க முயற்சித்த போது போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்தனர். 

இதையும் படிங்க:  ப்ளீஸ் நான் செய்தது தப்புதான்! இறங்கி வந்த கணவர்! மனம் இறங்காத மனைவி! வீடியோ காலை கட் செய்துவிட்டு தற்கொலை!

அப்போது போலீசார் சீர்காழி சத்யாைவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரவுடி சத்யாவிடம் இருந்து கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

click me!