பள்ளி மாணவிகளை மசாஜ் செய்யச்சொல்லி வற்புறுத்திய தலைமை ஆசிரியர்; பெற்றோர் ஆவேசம்

By Velmurugan s  |  First Published Aug 11, 2023, 4:22 PM IST

மேட்டூரை அடுத்த கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவிகளை கை, கால் பிடித்து விடச் சொன்ன தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு.


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கருங்கல்லூரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியரான ராஜா மாணவ, மாணவிகளை நாள்தோறும் கை, கால்களை அமுக்க சொல்வது, தலையை மசாஜ் செய்து விடச் சொல்லி தொந்தரவு செய்துள்ளார். 

இதுகுறித்து மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் தனிகாசலம், வட்டாட்சியர் முத்துராஜா, கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு, காவல் துணை கண்காணிப்பாளர் மரிய முத்து ஆகியோர் தலைமை ஆசிரியர் ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.

Latest Videos

அண்ணாமலையார் கோவிலில் ஆளுநர் ரவி குடும்பத்துடன் சாமி தரிசன்; கிரிவலம் சென்று வழிபாடு

அப்போது பெற்றோர்கள் ஆத்திரத்தில் தலைமை ஆசிரியரை தாக்க முயன்தால் காவல் துறையினர் அருகில் இருந்த வகுப்பறைக்குள் ஆசிரியரை பூட்டி பாதுகாத்தனர். இதனை அடுத்து தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் மேட்டூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் பயங்கரம்

இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

click me!