முதல் மனைவியை ஏமாற்றி 2வது திருமணம்! விஷயம் தெரிந்த இளவரசி! வெளிநாட்டுக்கு எஸ்கேப்பான கணவர்.!

By vinoth kumar  |  First Published Aug 11, 2023, 1:43 PM IST

சமையல் வேலைக்காக கோவையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பவித்ரா என்ற பெண்ணும் அதே ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.


திருச்சி அருகே முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம்  லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்(33). இவர் 5 ஆண்டுகளுக்கு முன் இளவரசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக கோவையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பவித்ரா என்ற பெண்ணும் அதே ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சித்தியை கரெக்ட் செய்து உல்லாசம்! தடையாக இருந்த அத்தையின் கதையை முடித்த மருமகன்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இந்நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.  தனக்கு திருமணம் ஆனதை மறைத்த பாலகுமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பவித்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். 2வது மனைவியை அழைத்துக்கொண்டு ரகசியமாக பெருவளநல்லூருக்கு திரும்பி வந்துள்ளார். அங்கே வேறு ஒரு வீட்டில் பவித்ராவை தங்க வைத்து முதல் மனைவிக்கு தெரியாமல் வாழ்க்கை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.  

ஆனால் எப்படியோ தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி கேள்விப்பட்ட முதல் மனைவி இளவரசி இது குறித்து லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனை அறிந்த பாலகுமார் வெளிநாடு தப்பி சென்று விட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஏர்போர்ட் இமிகிரேஷனில் இது குறித்து போலீசார் தகவல் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க;-  மூன்று குழந்தைகளின் தாய் பண்ற வேலையா இது! 3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண்!

இந்நிலையில் கத்தார் நாட்டில் இருந்து பாலகுமார் திரும்பி வந்துள்ளார். அவர் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருப்பதால், அவரை பிடித்த திருச்சி விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள், இது குறித்து லால்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விமான நிலையம் சென்று அவரை கைது செய்தனர்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாலகுமாரை சிறையில் அடைக்கப்பட்டார்.

click me!