காதலனை துரத்திவிட்டு சிறுமி கூட்டு வன்கொடுமை; வடஇந்தியாவை மிஞ்சிய திருப்பூர் கொடூரம்

By Velmurugan s  |  First Published Aug 11, 2023, 9:38 AM IST

பல்லடம் அருகே காதலனுடன் பேசிக்கொண்டிருந்த போது காதலனை தாக்கி விரட்டி விட்டு 17 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு வலைவீச்சு. 


திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொசவம்பாளையம் சாலையில் காதலனுடன் பேசி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக  பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் (25) ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் 2 பேரிடமும் இங்கு தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று விசாரித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

அப்போது சிறுமியும், அவரது காதலனும் பயத்துடன் பதில் அளித்த நிலையில், காதலனை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்று காளிவேலம்பட்டி அருகே காட்டுப்பகுதி வழியாக செல்லும்போது திடீரென 3 பேரும் சிறுமியை அங்குள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

சிவகாசியில் கதறி அழுதபடி அண்ணாமலையின் காலில் விழுந்த மூதாட்டி

மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியதுடன், பல்லடம் - கோவை சாலையில் உள்ள செட்டிப்பாளையத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். 

அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக காவல் துறையினர் காளிவேலம்பட்டி, செட்டிப்பாளையம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போது அதில் ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்தீபன் ஆகியோர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. 

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இதைனையடுத்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவனை பல்லடம் காவல் துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர். சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வடமாநிலங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை, சிறுமி வன்கொடுமை போன்ற செய்திகள் வரும் பொழுது நாங்கள் தமிழர்கள், நாகரிகத்தில் முன்னோடியானவர்கள் என்று தமிழகத்தைச் சேர்ந்த பலரும் மார்தட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வடமாநில சம்பவங்களை விஞ்சும் அளவிற்கு திருப்பூரில் சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

click me!