உல்லாசத்துக்காக.. ஒரு வாலிபர் 4 பெண்கள் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா? வலி தாங்க முடியாமல் கதறல்..!

Published : Jun 25, 2022, 07:47 AM ISTUpdated : Jun 25, 2022, 07:50 AM IST
உல்லாசத்துக்காக.. ஒரு வாலிபர் 4 பெண்கள் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா? வலி தாங்க முடியாமல் கதறல்..!

சுருக்கம்

சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சுரேஷ் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு காஞ்சிபுரத்துக்கு செல்ல சுரேஷ் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பேச்சுக் கொடுத்து ஆசைவார்த்தை கூறி, சுரேஷை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உல்லாசத்துக்கு அழைத்து சென்று வாலிபரை தாக்கி பணம், ஏடிஎம் கார்டு பறித்த 4 பெண்கள் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சுரேஷ் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு காஞ்சிபுரத்துக்கு செல்ல சுரேஷ் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை.. இரட்டை கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த மங்கி குல்லா.. வெளியான பகீர் தகவல்.!

அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பேச்சுக் கொடுத்து ஆசைவார்த்தை கூறி, சுரேஷை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதில், சபலமான சுரேஷ் அப்பெண்ணுடன் தாம்பரத்தில் ஒரு வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே 3 பெண்கள் இருப்பதை பார்த்து சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். இதில் சுரேஷ் சுதாரிப்பதற்குள், 4 பெண்களும் சேர்ந்து சுரேஷை சரமாரி தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம், ஏடிஎம் கார்டுகளை 4 பெண்களும் பறித்து கொண்டு விரட்டி அனுப்பினர்.

இதனையடுத்து, பலத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பிய சுரேஷ் சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு பேருந்து நிலைய சிசிடிவி கேமராக்களைய ஆய்வு செய்து வருகின்றனர். தலைமறைவான 4 பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;- 61 வயசு தாத்தாவுக்கு இதெல்லாம் தேவையா.. லாட்ஜில் ரூம் போட்டு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போது மரணம்.!

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்