ஒரு மாணவிக்காக மாணவர்களிடையே மோதல்… சினிமாவை மிஞ்சும் கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள்!!

By Narendran S  |  First Published Mar 16, 2023, 10:52 PM IST

கோவையில் ஒரு மாணவிக்காக இரண்டு பேர் தனது நண்பர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கோவையில் ஒரு மாணவிக்காக இரண்டு பேர் தனது நண்பர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் இசை பூங்குன்றன். இவர் கோவை ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். மேலும் இவரும் அதே கல்லூரியில் 2 ஆண்டு படித்து வரும் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவியுடன் படித்து வரும் அபிஷேக் என்ற சக மாணவரும் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி பூங்குன்றனை காதலிப்பது தெரியவந்ததால் மாணவியை பற்றி அபிஷேக் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து பூங்குன்றன் மற்றும் அவரது நண்பர்கள் கேட்ட போது அவர்களிடம் அபிஷேக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: காரில் கஞ்சா கடத்திய மதுரை தம்பதி… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Tap to resize

Latest Videos

பின்னர் அபிஷேக் மன்னிப்பு கேட்டது குறித்து அவரது நண்பர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து மறுநாள் இரவு அபிஷேக் தனது நண்பர்களான கவுசிக் பிரவீன், நவீன்குமார், ஆசிக்ரகுமான், பாண்டியராஜன், தீபக், சஞ்சய் ஆகியோருடன் சேர்ந்து ஈச்சனாரின் அருகே உள்ள பூங்குன்றனின் அறைக்குச் சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அறையில் இருந்த ராகுல் என்ற மாணவரும் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் பூங்குன்றன் காரில் கடத்தப்பட்டு ஈச்சனாரி பகுதியில் உள்ள காலியிடத்தில் வைத்து மீண்டும் கொடூரமாக தாக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள வேறு ஒருவரின் அறைக்கு அழைத்துச் சென்று அங்கும் வைத்து இரவு முழுவதும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பூங்குன்றன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: நாகையில் காப்பக சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காப்பக நிறுவனர் கைது

இதுத்தொடர்பாக வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீஸார்  கவுசிக் பிரவீன், நவீன்குமார், ஆசிக்ரகுமான், பாண்டியராஜன், தீபக் , சஞ்சய் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் பூங்குன்றனை தாக்கியதை அறிந்த அவரது நண்பர்களான சசிகுமார், சிரதீப், அபிஜித், கவுதம் ஆகியோர் அபிஷேக் அறைக்குச் சென்று அவரை அரிவாளை திருப்பி வைத்து தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அபிஷேக் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சசிகுமார், சிரதீப், அபிஜித்,  கவுதம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!