காதலிக்க மறுத்த பெண்ணை டீசல் ஊற்றி எரித்த கொடூரன்; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

By Velmurugan s  |  First Published Mar 16, 2023, 5:18 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முட்டம் கடற்கரை கிராமத்தில் காதலிக்க மறுத்த  இளம் பெண்ணை டீசல் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் வாலிபர் எவரெஸ்ட்க்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  அழிக்கால் பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவரது 16 வயது மகளை, முட்டம் பகுதியைச் சேர்ந்த எவரெஸ்ட் என்பவர் ஒருதலைப் பட்சமாக காதலித்து  வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி எவரெஸ்ட்  காதலிக்கும் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தன்னை காதலிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு அந்த இளம் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்தார். இதனால் படுகாயம் அடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரண வாக்குமூலம் அளித்தார்.

Latest Videos

தர்மபுரியில் கோர விபத்து: தரைமட்டமான பட்டாசு குடோன்; 2 பேர் உடல் சிதைந்து பலி

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வெள்ளிச்சந்தை காவல் துறையினர் எவரெஸ்ட்டை கைது செய்து அவர் மீது கொலை  வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு 10 வருடமாக நடைப்பெற்று வந்த நிலையில் இன்று நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அண்ணா பல்கலை பேராசிரியரை கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையன் கைது

இந்த வழக்கை  விசாரணை செய்த நீதிபதி ஜோசப் ஜாய் மாணவியை கொலை செய்த எவரெஸ்ட்க்கு ஆயுள் தண்டனையும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார்.

click me!