கஞ்சா போதையில் அரங்கேறிய அவலம்; தாய், தந்தையை உயிருடன் தீ வைத்து கொளுத்திய நபர் கைது

By Velmurugan s  |  First Published Mar 16, 2023, 3:01 PM IST

கஞ்சா போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனது பெற்றோரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரி அடுத்த திருகாஞ்சி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 67). தட்சிணாமூர்த்தி-லதா தம்பதியினரின் மகனான புகழ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. 5 வருடமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த புகழ், பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த தாய், தந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு, உறவினர் வீட்டிற்கு இயல்பாக சாப்பிட சென்றுள்ளார்.

தர்மபுரியில் கோர விபத்து: தரைமட்டமான பட்டாசு குடோன்; 2 பேர் உடல் சிதைந்து பலி

Latest Videos

இதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, லதா இருவரும் சம்பவத்தன்று இரவு வீட்டில் தீ காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக, மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் லதா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். தட்சிணாமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு ஜூன் மாதமே மறு வாய்ப்பு - அமைச்சர் அறிவிப்பு

இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கும் போது புகழ் கஞ்சா போதைக்கு அடிமையாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் மேலும் இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக மாறியதும் தெரியவந்தது.

இதனையடுத்து புகழை கைது செய்த காவல் துறையினர் அவரை காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மனநலம் பாதித்த வாலிபர் தாய் தந்தை என்று கூட பார்க்காமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

click me!