பெண்ணின் முகத்தை மார்பிங் செய்த இளைஞர்… அதிரடியாக கைது செய்த சைபர் கிரைம் போலீஸார்!!

By Narendran S  |  First Published Mar 16, 2023, 12:28 AM IST

கோவையில் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்த நபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். 


கோவையில் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்த நபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது பெண்ணின் முகம் மார்பிங் செய்யப்பட்டுது ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், இதுக்குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தொழிலதிபரிடம் போலீஸ் அதிகாரி போல நடித்து ரூ.1.75 கோடி அபேஸ்! காதலியுடன் சொகுசு வாழ்க்கை!

Tap to resize

Latest Videos

அதன் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அனுப்பியவர் கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்களிடம் சில்மிஷம் செய்த பாதிரியார்… வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு!!

இதை அடுத்து சைபர் கிரைம் போலிஸார் அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!