கூடவே இருந்து காட்டி கொடுத்த கூட்டாளி.. பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. 3 பேருக்கு சரமாரி வெட்டு

Published : Jun 28, 2022, 08:25 AM ISTUpdated : Jun 28, 2022, 12:34 PM IST
கூடவே இருந்து காட்டி கொடுத்த கூட்டாளி.. பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. 3 பேருக்கு சரமாரி வெட்டு

சுருக்கம்

 கொலை கும்பல் அவர்களை ஓட, ஓட விரட்டி வெட்டினர். குறிப்பாக மதிவாணனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தார். 

முன்விரோத காரணமாக பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்தவர் மதிவாணன் (26). பிரபல ரவுடியான  இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை, வழிப்பறி உள்பட ஏராளமான வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதிவாணன், தனது கூட்டாளிகளான செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஹேம்நாத்(18), சரத்குமார்(19), தனுஷ்(18) ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த மதிவாணன் உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

இதையும் படிங்க;- பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு கணவர் செய்த வெறித்தனமான காரியம்.. மிரண்டு அதிர்ந்துபோன மக்கள்..!

இதையும் படிங்க;- என்னோடு ஓயாமல் உல்லாசமாக இருந்துட்டு.. வேற ஒருத்திய கல்யாணம் பண்ணுவியா.. கதறும் பெண்.!

ஆனால், கொலை கும்பல் அவர்களை ஓட, ஓட விரட்டி வெட்டினர். குறிப்பாக மதிவாணனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் கொலை கும்பல் ஆட்டோவில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்நிலையில்,  அதே பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் வந்த 2 வரும் தப்பி சென்ற நிலையில் இருவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, ரத்தக்கறையுடன் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் ஆயுதங்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க;- அடிக்கடி வெளியூர் சென்ற மகன்.. சைடு கேப்பில் மருமகளுக்கு பிராக்கெட் போட்டு உல்லாசத்துக்கு அழைத்த மாமனார்.!

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மதிவாணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கஞ்சா மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி மதிவாணன் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மதிவாணன் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவான 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மதிவாணன் நேற்று இரவு பிரபாகரன் கூடவே இருந்ததாக தெரிகிறது. இதன் பின்னரே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?