சென்னையில் பயங்கரம்.. ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வீடு புகுந்து வெட்டி படுகொலை.. அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!

By vinoth kumar  |  First Published Jan 14, 2024, 8:58 AM IST

சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி மாதவன் (52). பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 


சென்னையில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான புளியந்தோப்பை நேர்ந்த மாதவன் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி மாதவன் (52). பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை மாதவன் ராயப்பேட்டை கஜடிபேகம் தெருவில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மாதவனை கொலை செய்ய முயன்றனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. விடுதியில் இறந்து கிடந்த இரண்டு ஐடி ஊழியர்கள்.. நடந்தது என்ன?

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாதவன் உயிர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். ஆனாலும்,  அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று வீட்டில் புகுந்த மாதவனை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வௌ்ளத்தில் சரிந்த மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  முதற்கட்ட விசாரணையில் ரவுடி ஆற்காடு சுரேஷை கொலை செய்த அதே கும்பல்தான் மாதவனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கும்பலை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. உள்ளே புகுந்த போலீஸ்..!

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி பட்டினம்பாக்கம் அருகே ரவுடி ஆற்காடு சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட போது அவருடன் இருந்த ரவுடி மாதவனை அந்த கும்பல் கொலை செய்ய முயன்றதில் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு அதே கும்பல் வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!