நாகையில் காதலியை அடைய நினைத்த நண்பனை கோவில் வாசலில் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்தின் (வயது 55). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இவர் தற்போது வேளாங்கண்ணி அருகே பரவையில் உள்ள ஒரு டீக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கருவேலங்கடை மகா காளியம்மன் கோவில் முன்பாக கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள். வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.
காவல் துறையினரின் விசாரணையில், ரவிச்சந்திரனின் போதை கூட்டாளியான தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு தெருவைச் சேரந்த நடவண்டி மோகனும் கொலை செய்யப்பட்ட ரவிச்சந்திரனும் பகலில் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். மேலும் இரவு ரவிச்சந்திரன் தனது வீட்டிற்கும் நடைவண்டி மோகனை அழைத்துச் சென்றதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மோகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று இரவு ரவிச்சந்திரன், மோகன் மற்றும் அவரது நண்பர் ஞானபிரகாசம் ஆகியோர் கூட்டாக மது அருந்தி உள்ளனர்.
ரூ.7.5 கோடி நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்; நேரில் சென்று வாழ்த்திய எம்.பி.வெங்கடேசன்
அப்போது மோகனின் காதலியை அடைய நினைத்த ரவிச்சந்திரன் அது குறித்து பேசி உள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி அவரது நண்பன் ஞானபிரகாசனுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கொலை செய்த மோகன், கொலைக்கு உடந்தையாக இருந்த கருவேலங்கடை பகுதியைச் சேர்ந்த ஞானபிராகசம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகை அருகே காதலியை அடைய நினைத்த நண்பனை கோவில் வாசலில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.