புகார் அளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி கொலை செய்த காவலருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு - தேனியில் பரபரப

By Velmurugan sFirst Published Jan 11, 2024, 2:28 PM IST
Highlights

திருமண பந்தத்திற்கு மீறிய உறவில் குடும்பம் நடத்திய பெண்ணை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியில் இருந்த காவலருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், அமுதா தம்பதியருக்கு திருமணமாகி ருத்ரா என்ற பெண் குழந்தை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட சண்டையில் மனைவி அமுதா கம்பம் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்பொழுது அங்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியில் இருந்த ஜெயக்குமாருக்கும், அமுதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு திருமண பந்தத்திற்கு மீறிய உறவில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். 

இதனால் அமுதாவின் கணவர் பிரகாஷ் அவரை விட்டு பிரிந்து வேறொரு திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றார். மேலும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் அமுதாவிற்கு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து திருமண பந்தத்திற்கு மீறிய உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் அமுதா நாள்தோறும் கேரளாவில் தனியார் ஏலக்காய் தோட்டத்திற்கு  சென்று வருவது வழக்கம். இதனால் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமாருக்கு அமுதாவின் மீது சந்தேகம் ஏற்பட்டு மது போதையில் அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் அமுதாவிற்கும், காவலர் ஜெயக்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

Latest Videos

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

இந்நிலையில் கடந்த 01.03.2023  அன்று அமுதாவின் மகள் ருத்ராவிற்கு உனது அம்மா இறந்த நிலையில் கிடக்கிறார் என்ற தகவல் வந்ததை தொடர்ந்து மகள் ருத்ரா நேரில் சென்று பார்த்த பொழுது தாய் அமுதா உயிரற்ற நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ருத்ரா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் தனது தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனவும், என் தாய் மரணத்திற்கு காரணம் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தான் என கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் 7 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொடூரக்கொலை; போலீஸ் விசாரணை

இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவுற்று  சாட்சியங்கள், முக்கிய தடயங்கள் அடிப்படையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டு குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொலை செய்த குற்றத்திற்காக ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 6 மாதக் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து குற்றவாளி ஜெயக்குமாரை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

click me!