மாற்று மதத்தில் திருமணம்.. ஹோட்டல் அறைக்குள் புகுந்து தம்பதி மீது கொடூரத் தாக்குதல்..!

By vinoth kumar  |  First Published Jan 11, 2024, 8:57 PM IST

கர்நாடாக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது முஸ்லிம் பெண்ணும் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆணும் திருமணம் செய்து கொண்டனர். 


கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து மாற்று மத திருமணம் செய்த தம்பதியை தாக்கிய சம்பவம் ெபரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடாக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது முஸ்லிம் பெண்ணும் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆணும் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்கள் கடந்த 7ம் தேதி தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தனர். அப்போது அவர்களது அறைக்குள் 6 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்து இருவரையும் கொடூரமாக தாக்கினர். மேலும், அந்த கும்பல் முஸ்லிம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. விடுதியில் இறந்து கிடந்த இரண்டு ஐடி ஊழியர்கள்.. நடந்தது என்ன?

ஹோட்டல் அறைக்குள்  புகுந்து தம்பதி மீது தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட தம்பதி ஹவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேதடி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  என் கூட பேசலனா.. நம்ம ஒண்ணா இருந்த போட்டோவை வெளியிடுவேன்.. மிரட்டிய காதலன்.. மரண வாக்குமூலம் கொடுத்த மாணவி!

click me!