காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர காதலன்..!

By vinoth kumar  |  First Published Jan 13, 2024, 9:27 AM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேசன்(30). இவர் 20 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். 


செஞ்சி அருகே ஆபாச வீடியோவைக் காட்டி இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேசன்(30). இவர் 20 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசைவார்த்தை கூறி காதலியை வெங்கடேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மகள்களுடன் வசமாக சிக்கிய அம்மாக்கள்.! கொட்டி கிடந்த ஆபாச வீடியோக்கள்.! ஆசிரியரின் காம லீலைகள் அம்பலம்.!

மேலும், வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிய வெங்கடேசன், தனது காதலியிடம் ஆடைகள் அனைத்தையும் களைய வைத்து பேசி இருக்கிறார். இதில் அவர் நிர்வாணமாக இருப்பதை தனது செல்போனில், காதலிக்கே தெரியாமல் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை காதலியிடம் காட்டி மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-  Honour killing: காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை.. பெண்ணின் பெற்றோர் கைது.!

மேலும் அவரை வீட்டுக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். நாளுக்கு நாள் அவரது டார்ச்சர் அதிகரிக்கவே பொறுமை இழந்த பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக அவரது அண்ணன் புருஷோத்தமன் (32), உறவினர் பூபாலன் (40), பூபாலன் மனைவி புஷ்பா (35) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். . மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

click me!