வரதட்சணை வேணுமா உனக்கு? மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார் - அதிர்ச்சி சம்பவம்

Published : Jul 02, 2022, 07:05 PM IST
வரதட்சணை வேணுமா உனக்கு? மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார் - அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

கடந்த சில மாதங்களாக வரதட்சணை பிரச்சனை தொடர்பாக டயானாவிற்கும் அஜித்குமார் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசவன் புத்தம் துறையை சேர்ந்தவர் ஆண்டனி ரபேஸ். இவரது மகள் டயானா (22) இவருக்கும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த அஜித் குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நடந்தது. தற்போது இவர்களுக்கு மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 

மேலும் செய்திகளுக்கு.. Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை பிரச்சனை தொடர்பாக டயானாவிற்கும் அஜித்குமார் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரல்வாய்மொழியில் உள்ள கணவர் வீட்டில் வைத்து டயானாவை கணவரின் குடும்பத்தார் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!

கிடைத்த தகவலை அடுத்து, டயானாவின் சகோதரர் நிஸ்வின், அம்மா ஜோஸ்பின், சித்தி மேரி கிரிட்டா, ஆகியோர் இன்று விவரத்தை கேட்க சென்ற போது, அஜித் குமார் மாமியார் சகாய மேரி மாமனார் முத்தையா உட்பட 10 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் டயானா அவரது அம்மா சித்தி தம்பி ஆகியோர் படுகாயம் அடைந்து நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி