முதல் இரவுக்கு சென்ற புதுமணப்பெண்.. மிருகத்தனமாக நடந்து கொண்டதால் கம்பி எண்ணும் கணவர்..!

By vinoth kumar  |  First Published Jul 2, 2022, 12:30 PM IST

ஆயிரம் ஆசைகளுடன் உள்ளே  சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கட்டியணைக்க வேண்டிய கணவரின் கரங்கள் அந்த பெண்ணின் உடலை ரனமாக்கின. அன்றிரவு நடந்த முதல் இரவில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை, பாலியல் தொல்லை கொடுத்து மிருகத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 


முதல் இரவில் புதுமணப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகை மாவட்டம் தொழுதுரைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் திருவாரூர் மாவட்டம் பூத்தாநல்லுரைச் சேர்ந்த நளினி என்பவருக்கும் கடந்த 27ம் தேதி பெற்றோர் முன்னிலையில் தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில், மணப்பெண்ணுக்கு 12 சவரன் நகை, கட்டில், மெத்தை மற்றும் பீரோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட சீர்வரிசை வழங்கப்பட்டன. இதனையடுத்து,  புதுமண தம்பதியை வாழ்த்தி தொழுதூரில் உள்ள புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மகளை கள்ளக்காதலனுக்கு இறையாக்கிய கொடூர தாய்.. ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம்.!

முதலிரவுக்கு ராஜ்குமார் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து, சம்பிரதாய முறைப்படி மணப்பெண்ணை முதலிரவு அறைக்குள் அனுப்பியிருக்கிறார்கள். ஆயிரம் ஆசைகளுடன் உள்ளே  சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கட்டியணைக்க வேண்டிய கணவரின் கரங்கள் அந்த பெண்ணின் உடலை ரனமாக்கின. அன்றிரவு நடந்த முதல் இரவில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை, பாலியல் தொல்லை கொடுத்து மிருகத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அச்சத்தில் உறைந்த நளினி அதிர்ச்சியில் அங்கே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பெண்ணின் உறவினர்கள் உடம்பில் பல காயங்களுடன் நளினியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க;- வாயில் சரக்கை ஊற்றி நர்ஸை புதரில் வைத்து நாசம் செய்த கொடூரன்கள்.. தாயிடம் சொல்லி கதறிய மகள்..!

இந்நிலையில். தனது மகளுக்கு தாலி கட்டிய ராஜ்குமார், முதலிரவில் வக்கிர புத்தியுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும், அனுமதி இல்லாமல் பாலியல் சீண்டலால் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மணப்பெண்ணை பெண்ணே அல்ல எனக் கூறியதாகவும், எனவே தனது மகளை மானபங்கம் மற்றும் அவமானப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண்ணின் தாயார் பரமேஸ்வரி நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து புகார் அளித்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ராஜ்குமாரை நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;-  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவர் கண்டித்ததால் மனைவி என்ன செய்தார் தெரியுமா?

click me!