புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ்(34). இவரது மனைவி நித்யகாமாட்சி (24). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து தலையில் அம்மிக்கல்லைப்போட்டு கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ்(34). இவரது மனைவி நித்யகாமாட்சி (24). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு மகன் அஸ்வத் (7), மகள்கள் நீபாஸ்ரீ(5), புவி அக்சரா(3) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் நித்ய காமாட்சி கணவரிடம் கோபித்து கொண்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்று விடுவார். பின்னர் பெற்றோர் வற்புறுத்தலால் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. தாயின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?
இந்நிலையில் நேற்றிரவு குழந்தைகளை தூங்க வைத்து விட்டு நித்ய காமாட்சி தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் போதையில் வீட்டுக்கு வந்த பால்ராஜ், நித்ய காமாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து பால்ராஜ் அழுத்தினார்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். பின்னர், குழந்தைகளை தூங்க வைத்து விட்டு நித்ய காமாட்சி தூங்கி கொண்டிருந்த போது மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து பால்ராஜ் அழுத்தினார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த நித்ய காமாட்சி தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க;- குலைநடுங்க வைத்த பல்லடம் கொலை! மறைச்சு வச்சுக்கிற கத்திய காட்டுகிறேன் சொல்லிட்டு! எஸ்கேப்பாக நினைத்த குற்றவாளி
இதனையடுத்து பால்ராஜ் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பால்ராஜை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நித்திய காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை கொலை செய்த வழக்கில் தந்தையும் சிறைக்கு சென்றதால் 3 குழந்தைகள் ஆதரவின்றி கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களில் கண்ணீர் வரழைத்தது.