காதல் கணவர் கொலை.. மாமா.. என்ன தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டியே.. கதறும் 22 வயது மனைவி..!

By vinoth kumar  |  First Published Sep 5, 2023, 7:44 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (27). இவரது மனைவி யாமினி (22). இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். 


அரக்கோணத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (27). இவரது மனைவி யாமினி (22). இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினருக்கு குழந்தை இல்லை.  விக்னேஷ் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கல்யாண பத்திரிகையில எதுக்கு பெயர் போடல.. ஆத்திரத்தில் தாத்தாவை கொன்ற பேரன்.. எப்படி தெரியுமா?

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் அழைப்பதாக கூறி 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன யாழினி உடனே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். 

இதையும் படிங்க;-  6 வருஷமா என்னை லவ் பண்ணிட்டு! உங்க வீட்ல சொன்னாங்கன்னு என்ன கழட்டி விட்டுட்டியே! காதலியை கதறவிட்ட காதலன்.!

அப்போது  சித்தேரி ரயில்வே கேட் அருகே உள்ள மாந்தோப்பில் விக்னேஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் உயிரிழந்த செய்தியை அறிந்த யாழினி என்னை விட்டுட்டு போயிட்டேயே மாமா என்று நெஞ்சில் அடித்து கொண்டு கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

click me!