பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Sep 4, 2023, 1:17 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் புரிந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்கிற குட்டி என்பவர் செந்தில்குமாரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுநராக பணியாற்றி பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு வெங்கடேசனை பணியில் இருந்து நீக்கியுள்ளார். 

இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே அமர்ந்து வெங்கடேசன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தி உள்ளார். எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என செந்தில் குமார் கேட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் செந்தில்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உடனிருந்த மற்ற இரண்டு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன்; மீட்கச்சென்ற மனைவி, உறவினருக்கு நேர்ந்த சோகம் - தேனியில் பரபரப்பு

சத்தம் கேட்டு செந்தில்குமாரின் வீட்டின் அருகே இருந்த அவரது தம்பி மோகன் மற்றும் செந்தில்குமாரின் சித்தி ரத்தினம்மாள் மற்றும் மோகனின் தாய் புஷ்பவதி ஆகியோர் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியவர்களை தடுக்க முயன்ற மூன்று பேரையும் மீண்டும் சரமாரியாக கை மற்றும் தலை பகுதிகளில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அணை பகுதிகளில் தொடர் மழை; முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

4 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே இறந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொள்வோம் என்று பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!