அருணாச்சல பிரதேசத்தில் மாணவிகளை பலாத்காரம் செய்ததாக 50 வயது பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 50 வயது ஆசிரியர் பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் பற்றி தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெற்றோர் அளித்த எஃப்ஐஆர் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் முதல்வரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக, கீழ் சுபன்சிரி காவல் கண்காணிப்பாளர் கெனி பக்ரா கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் உள்ள குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!
போஸ்கோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். கடந்த ஆண்டு நவம்பரில், ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் விடுதி வார்டன், ஆறு சிறுவர்கள் மற்றும் 15 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.