வீட்டின் அருகே மது அருந்திய மர்ம நபர்கள்.. தட்டி கேட்ட 4 பேர் துடி துடிக்க வெட்டி கொலை...பல்லடத்தில் பரபரப்பு

Published : Sep 04, 2023, 06:10 AM IST
வீட்டின் அருகே மது அருந்திய மர்ம நபர்கள்.. தட்டி கேட்ட  4 பேர் துடி துடிக்க வெட்டி கொலை...பல்லடத்தில் பரபரப்பு

சுருக்கம்

வீட்டின் அருகே மது குடித்த நபரை தட்டிக்கேட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

4 பேர் வெட்டிக்கொலை

மது குடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் இளைய சமுதாயத்திடம் அதிகரித்து வருகிறது. மது மட்டுமில்லாமல் கஞ்சா போன்ற பழக்கமும் வேகமாக அதிகரித்து வருகிறது. மது போதையில் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் குற்ற சம்பவங்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வீட்டின் அருகே மது குடித்தவரை தட்டிக்கேட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் துடிக்க துடிக்க வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர்களது வீட்டின் அருகே மர்ம நபர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

மது குடித்ததை கண்டித்ததால் விபரீதம்

இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் செந்தில் இங்கு மது அருந்த கூடாது என எச்சரித்துள்ளார்.இருந்த போதும் மது பிரியர்கள் தொடர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. இதனால் செந்தில் குமாருக்கும் அந்த நபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மது போதையில் இருந்த நபர்கள் ஆத்திரமடைந்து  அரிவாளால் வெட்டியதில் செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியாகினர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே இறந்தவர்களின் உடலை எடுக்க முடியும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசிய போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 4 பேரை துடிக்க துடிக்க கொன்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  

இதையும் படியுங்கள்

தொடர்ந்து பாலியல் சீண்டல்.. ஆசிரியரை கழுத்தறுத்து கொன்ற 14 வயது சிறுவன் - டெல்லியில் அரங்கேறிய கொடூரம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?