நோய்வாய்பட்டு படுக்கையில் இருந்த சகோதரியை அடித்து கொன்ற அண்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிகோட்டையில் வாடகை வீட்டில் தனது தங்கை தமிழ்செல்வியுடன் வசித்துவந்தவர் சக்திவேல். சக்திவேலின் தங்கை தமிழ் செல்விக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு நடக்க இயலாமல் படுக்கையில் தான் இருந்து வந்தார்.
இந்நிலையில் சரிவர நடக்க இயலாத சகோதரி தமிழ்செல்வி இயற்கை உபாதைகளை சுத்தம் செய்யாமல் அசுத்தமாக இருந்துவந்த நிலையில் கோபம் கொண்ட சக்திவேல் இரும்பு கம்பியால் தலையில் அடித்துள்ளார். இதில் தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
undefined
திருச்சியில் பரபரப்பு; அண்ணாசிலை மீது வெண்டைக்காய் வீச்சு; விவசாயிகள், காவல்துறையினர் தள்ளுமுள்ளு!!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தளி காவல் துறையினர் தமிழ்செல்வி உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சக்திவேலிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் அதிரடி கைது