நைட்டியுடன் கோவிலுக்குள் வந்த பெண் திமுக கவுன்சிலர்.. அர்ச்சகரை திட்டிய கவுன்சிலர் - வைரல் வீடியோ

Published : May 02, 2022, 12:33 PM IST
நைட்டியுடன் கோவிலுக்குள் வந்த பெண் திமுக கவுன்சிலர்.. அர்ச்சகரை திட்டிய கவுன்சிலர் - வைரல் வீடியோ

சுருக்கம்

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் ஸ்ரீ சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 

இக்கோவிலில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதை பார்வையிடச் சென்ற திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா நைட்டி அணிந்துகொண்டு கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அதனை அர்ச்சகர் கண்டித்துள்ளார், அதற்கு பெண் கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் அர்ச்சகரை திட்டியதாக கூறப்படுகிறது.  இதனால் அர்ச்சகராக பணியாற்றி வரும் கண்ணன் என்பவர் திமுக கவுன்சிலர் மஞ்சுளா மூலம் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறதாக கூறி, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். 

இதில் கடந்த 23 ஆண்டுகளாக சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். தனக்கு 40-வது கோட்டத்தின் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா கோவில் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுப்பதாவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலமாக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான் காரணம் என்றும் பேசியுள்ளார். 

இதில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வீடியோ மூலமான கோரிக்கை விடுத்துள்ளார். அர்ச்சகர் கண்ணனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணைக்கும்போது, திமுக கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் பேசுவது போன்ற வீடியோக்களும் வெளியாகி இருந்தன.. அந்த வீடியோவில், அங்கிருந்த பெண்கள், அர்ச்சகருக்கு மரியாதை தருமாறு சொல்லியும், மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் பேசி உள்ளதாக தெரிகிறது. 

வீடியோ வெளியிட்ட அன்று சாயங்காலமே, அர்ச்சகர் கண்ணன், கோவிலில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு, புதிய அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். கவுன்சிலர் மஞ்சுளா கொடுத்த நெருக்கடியால்தான், சீதா ராமச்சந்திர மூர்த்தி கோவில் அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தற்போது பரவி வரும்நிலையில், அதற்கு சம்பந்தப்பட்ட மஞ்சுளாவே ஒரு நீண்ட நெடிய விளக்கம் தந்துள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது.  இதற்கு மஞ்சுளா விளக்கம் அளித்திருக்கிறார்.  அர்ச்சகர் கண்ணன், கோவிலுக்கு வரும் பெண்  பக்தர்களிடம் தவறாக நடந்து வருவதாக பொதுமக்கள் பலரும் என்னிடம் புகார் சொன்னார்கள். அதனால் நான் அர்ச்சகரை கண்டித்தேன். மற்றபடிஅர்ச்சகர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க : யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்குறது.. 1,500 கோடி கமிஷன் போகுது.! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!