நள்ளிரவில் கத்திமுனையில் 11 வயது சிறுமி கடத்தல்.. தாய், மகனை கட்டிபோட்டு மர்மகும்பல் துணிகரம்..நடந்தது என்ன?

By Thanalakshmi VFirst Published May 2, 2022, 11:04 AM IST
Highlights

நாமக்கல் மாவட்டம் காளிச்செட்டிப்பட்டியில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவத்தில் சிறுமியை மீட்ட போலீசார்,கடத்தலில் ஈடுப்பட்ட தம்பதியை கைது செய்தனர்.
 

நாமக்கல்‌ மாவட்டம்‌ காளிச்செட்டிப்பட்டி ஊராட்சி, புதுக்கோட்டை கிராமத்தைச்‌ சேர்ந்தவர் சரவணன். இவர் லாரி ஓட்டுநராக உள்ளார். இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும்‌, 13 வயது மகனும்‌, 11 வயது மகளும்‌ உள்ளனர்‌. நாமக்கல்‌ - திருச்சி சாலையில்‌ உள்ள தனியார்‌ பள்ளியில்‌ இருவரும்‌ படித்து
வருகின்றனர்‌. 

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டின்‌ மேல்‌ மாடியில்‌ ஜெய்சன்‌, கெளசல்யா, சிறுமி மவுலனிசா தூங்கிக்‌ கொண்டிருந்தனர். அப்போழுது  நள்ளிரவு 2 மணி அளவில்‌ அங்கு நுழைந்த முகமூடி அணிந்த மர்மகும்பல், அவர்களை கத்திமுனையில் மிரட்டி நகைபறிப்பு ஈடுப்பட்டனர். மேலும்  வந்த மர்ம நபர்கள்‌ கெளசல்யாவையும்‌, சிறுவனையும்‌ கட்டிப்‌ போட்டு விட்டு சிறுமியை மட்டும்‌ கடத்திச்‌ சென்றனர்‌. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலையில்‌ வீட்டிற்கு வந்த கணவன் சரவணன்‌ இதனைக்‌ கண்டு அதிர்ச்சியடைந்து, எருமப்பட்டி காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ அளித்தார்‌. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின்‌ பெற்றோர்‌ சரவணன்‌, கெளசல்யா மற்றும்‌ அக்கம்‌ பக்கத்தினரிடம்‌ தீவிர விசாரணை நடத்தினர்.

சம்பவம் அறிந்து விரைந்த வந்த மாவட்ட எஸ்.பி சாய்சரண்‌ தேஜஸ்வி வீட்டில்‌ இருந்தவர்களிடம்‌ விசாரணை நடத்தினார்‌. இதற்கிடையே சிறுமியை கடத்தி சென்ற கும்பல், சரவணனுக்கு கைப்பேசியில் அழைத்து, ரூ. 50 லட்சம்‌ கொடுத்த மகளை விடுவேன் என்று மிரட்டல்‌ விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சொத்து பிரச்சனை, நில தகராறு, முன் விரோதம், கொடுக்கல் வாங்கல் பிரிச்சனை போன்றவற்றால் சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கினர். இதனிடையே கடத்தப்பட்ட சிறுமியை மீட்க 6 தனிப்படைகள்‌ அமைக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படம் பதிவிட்டு, தகவல்‌ தெரிந்தால்‌ உடனடியாக தகவல்‌ அளிக்கவும்‌ வேண்டுகோள்‌ விடுக்கப்பட்டது. இந்தக்‌ கடத்தல்‌ பணத்திற்காக நடந்ததா அல்லது பழிவாங்கும்‌ நோக்குடன்‌ அரங்கேற்றப்பட்டதா என்பது குறித்து போலீஸார்‌ தீவிரமாக விசாரித்து வந்தனர்‌.

இந்த நிலையில்‌ கடத்த கும்பல் அலங்காநத்தம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சிறுமியை விட்டுவிட்டு, தகவல் அளித்துவிட்டு கும்பல் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விரைந்த சென்ற போலீசார், ரூ.50 லட்சம்‌ கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமியை மீட்டனர். இந்நிலையில் சிறுமி அளித்த தகவலின் படி, அதே பகுதியைச்‌ சேர்ந்த உறவினர்களான மணிகண்டன்‌-பொன்னுமணி தம்பதியை காவல்துறையினர்‌ கைது செய்தனர்‌. 

click me!