
உத்திர பிரதேச மாநிலத்தில் 19 வயது நபர் தனது உறவினர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தி, தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் காதல் தோல்வி காரணமாக 19 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் குடும்பத்தார் காயமுற்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அந்த நபர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
காதல்:
பரேலி மாவட்டத்தை சேர்ந்த ரின்கு கங்வார் என்ற நபர் அதே பகுதியை சேர்ந்த ரச்னா கங்வார் (22 வயது) உடன் தொடர்பில் இருந்துள்ளார். எனினும், ரச்னா கங்வார் குடும்பத்தார், அவருக்கு வேறொரு நபரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விட்டனர். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ரின்கு, சிர்சா கிராமத்தில் உள்ள ரச்னாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் இருந்த ரச்னாவின் தாய் மாயா தேவியை (50 வயது) அங்கிருந்த கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கினார்.
துப்பாக்கிச் சூடு:
பின் ரச்னாவில் சகோதரர் குறுக்கிட, ரின்கு அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் ரச்னாவின் சகோதரர் ரவிந்திரபால் (28 வயது) அதே இடத்தில் உயிரிழந்தார். இதை அடுத்து ரச்னாவின் வீட்டை விட்டு வெளியேறிய ரின்கு 20 மீட்டர்கள் கடந்ததும், கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இதில் காயமுற்ற மாயா மற்றும் ரச்னா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.