வங்கி சர்வரை ஹேக் செய்து ரூ.16 கோடி அபேஸ்! சைபர் கிரிமினல்கள் கைவரிசை!

By SG BalanFirst Published Jul 17, 2024, 12:31 AM IST
Highlights

5 நாட்களாக 84 பரிவர்த்தனைகள் மூலம் வங்கியில் இருந்த பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். வங்கியில் உள்ள இருப்புத்தொகையை சரிபார்த்தபோது, இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

நைனிடால் வங்கியின் நொய்டா கிளையில் ரூ.16.1 கோடியை சைபர் கிரிமினல்கள் திமுடிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபர் மோசடிக்காரர்கள் வங்கியின் RTGS சேனலை ஹேக் கோடி கோடியாகத் திருடியுள்ளனர்.

தொடர்ந்து 5 நாட்களாக 84 பரிவர்த்தனைகள் மூலம் வங்கியில் இருந்த பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். வங்கியில் உள்ள இருப்புத்தொகையை சரிபார்த்தபோது, இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. முதலில் ரூ.3.6 கோடி குறைவது தெரியவந்தது. ஆரம்பத்தில் வங்கியின் RTGS சேனலில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனை இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் மேலும் விசாரணையில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரிந்தது.

Latest Videos

இதுபற்றி வங்கியின் ஐடி மேலாளர் சுமித் குமார் ஸ்ரீவஸ்தவா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜூன் 17 முதல் 20 வரை மோசடி நடந்துள்ளது என்று அவர் புகாரில் கூறினார். மோசடி செய்தவர்கள் வங்கியின் சர்வரை ஹேக் செய்து பல பரிவர்த்தனைகளில் வெவ்வேறு கணக்குகளுக்கு பணத்தை மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

பாத்ரூம் செப்பல் ஒரு லட்ச ரூபாயாம்! அப்புடி என்ன தான் இருக்கு இந்த செருப்புல? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

சர்வரை ஹேக் செய்த திருடர்கள்:

போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மற்ற ஏஜென்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்த தனிப்படை அமைத்துள்ளனர். விசாரணை நடத்தி, பறிபோன தொகையை மீட்பதாக உறுதி அளித்துள்ளனர்.

வங்கியின் கோர் பேங்கிங் சிஸ்டம் (CBS) மற்றும் ஸ்ட்ரக்ச்சர்டு ஃபைனான்சியல் மெசேஜிங் சிஸ்டம் (SFMS) ஆகியவற்றில் உள்ள பாதிப்புகளைப் பயன்படுத்தி இந்த மோசடி நடந்திருப்பதாக நம்பப்படுகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் விவேக் ரஞ்சன் ராய் கூறுகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகள் நடைபெறாமல் தடுக்க வங்கி தனது பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இழந்த பணத்தை மீட்க முடியுமா?

அண்மையில், நொய்டாவைச் சேர்ந்த அங்கித் குமார் என்ற 31 வயது தொழிலதிபர், ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் ரூ.14 லட்சத்தை இழந்தார். உடனே நொய்டா சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் மோசடி செய்பவர்களின் வங்கிக் கணக்குகளைக் கண்டுபிடித்து முழுத் தொகையையும் மீட்டுக் கொடுத்துவிட்டனர்.

பாதிக்கப்பட்ட அங்கித் குமார், ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறிய வாட்ஸ்அப் மெசேஜை நம்பி ஏமாந்திருக்கிறார். மோசடிக்காரர்களை நம்பி ரூ.14 லட்சம் முதலீடு செய்த பிறகுதான் முறைகேடு நடப்பதை உணர்ந்திருக்கிறார். சைபர் கிரைம் குழுவின் விரைவான நடவடிக்கையால், அங்கித் குமார் வாழ்நாள் முழுவதும் சேமித்திருந்த பணம் திரும்பக் கிடைத்துவிட்டது.

2024இல் இந்தியா, சீனாவின் வளர்ச்சி மிரட்டலாக இருக்கும்! விளக்கமாகக் கூறும் IMF கீதா கோபிநாத்!

click me!