நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை.. மதுரை பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

By vinoth kumar  |  First Published Jul 16, 2024, 9:04 AM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்  தேதி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை தலைநகர் மட்டுமல்ல தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த பதற்றம் இடங்குவதற்குள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்  தேதி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை தலைநகர் மட்டுமல்ல தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த பதற்றம் அடங்குவதற்குள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங்கை முதல் வெட்டு வெட்டிய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்! துப்பாக்கி! நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்!

இந்நிலையில், மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்ரமணியன் அதிகாலையில் நடை பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல இன்றும் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற அவரை திடீரென மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து ஓட ஒட விரட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது. 

இதையும் படிங்க: அமைச்சர் வீட்டருகே பகீர் சம்பவம்.! நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை- யார் இந்த பாலசுப்பிரமணி.?

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலசுப்ரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!