போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற போது தற்காப்புக்காக திருவேங்கடத்தை இடது மார்பு, வயிறு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்திலிருந்து துப்பாக்கி மற்றும் 6 நாட்டு வெடி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ், திருவேங்கிடம் உள்ளிட்ட 11 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
undefined
இதையும் படிங்க: Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதான ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நடந்தது என்ன?
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூறிவந்தனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கைது செய்யப்பட்ட 11 பேரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தியதில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையும் படிங்க: Armstrong : 10 நாட்களாக நோட்டம்! ஒயின் ஷாப்பில் ரூட்! 45 நிமிடங்கள்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல்!
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஆயுதங்களை ரெட்டேரி அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து அவரை அதிகாலை 5.30 மணிக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற போது தற்காப்புக்காக திருவேங்கடத்தை இடது மார்பு, வயிறு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் மீது 3 கொலை உள்பட 11 வழக்குகள் உள்ளது.
ரவுடி திருவேங்கடம் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கி மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை யார் தயாரித்தது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் மீது முதல் வெட்டு வெட்டியவர் திருவேங்கடம் என்பது குறிப்பிடத்தக்கது.