மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் பெண் ஊழியர் வெட்டி படுகொலை.. தலைநகரத்தை தொடர்ந்து அலறும் தூங்கா நகரம்!

By vinoth kumar  |  First Published Jul 12, 2024, 10:57 AM IST

சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என எதிர்கட்சித் தலைவர்கள்  விமர்சித்து வருகின்றனர். 


மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் புகுந்து முத்துலட்சுமி என்ற பெண் ஊழியர் படுகொலை செய்து நகையை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என எதிர்கட்சித் தலைவர்கள்  கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அப்படி இருந்த போதிலும் அவ்வப்போது கொலை சம்பவம் நடந்த வண்ணம் உள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: பூவிருந்தவல்லி சிறையில் சிக்கிய குட்டி செல்போன், 3 பேட்டரி! ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் புதிய திருப்பம்!

இந்நிலையில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் புகுந்து முத்துலட்சுமி என்ற பெண் ஊழியர் படுகொலை செய்து அவர் அணிந்திருந்த நகையை மர்ம நபர் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:  காதல் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்! நடந்தது என்ன? போலீசில் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

மதுரையில் கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 8ம் தேதி மதுரை திருமங்கலம் வாகைக்குளம் மாயன்நகர் பகுதியில் காசம்மாள் (70) 65 பவுன் நகைக்காகவும்,  ஜூலை 11ம் தேதி மதுரை மேலூர் கச்சிராயன்பட்டியில் பாப்பு  (60) என்பவரும், விரகனூர் பகுதியில் தோப்புக்குள்  56 பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!