சொத்துலியா பங்கு கேக்கற.. அக்காவை கோடாரியால் தாக்கிய தம்பி.. இறுதியில் நடந்தது என்ன?

Published : Jul 10, 2024, 01:28 PM ISTUpdated : Jul 10, 2024, 10:13 PM IST
சொத்துலியா பங்கு கேக்கற.. அக்காவை கோடாரியால் தாக்கிய தம்பி.. இறுதியில் நடந்தது என்ன?

சுருக்கம்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பெனகச்சர்லா கிராமத்தில்  சொத்தில் பங்கு கேட்ட அக்கா மகபூபியை தம்பி ஜிலானி  என்பவர் கோடாரையால் ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

குடும்ப சொத்தில் பங்கு கேட்ட அக்காவை கோடாரியால் தம்பி கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பெனகச்சர்லா கிராமத்தில்  சொத்தில் பங்கு கேட்ட அக்கா மகபூபியை தம்பி ஜிலானி  என்பவர் கோடாரையால் ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும், அக்காவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த மகபூபியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: காதல் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்! நடந்தது என்ன? போலீசில் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

இதனையடுத்து ஜிலானியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசில் அளித்த வாக்குமூலத்தில் ஜிலானி குடும்பத்திற்கு சொந்தமான வீட்டுமனை ஒன்று உள்ள நிலையில் அந்த வீட்டு மனையில் அவருடைய மூத்த அக்கா மகபூதி  பங்கு கேட்டுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென்று ஆவேசமடைந்த தம்பி ஜிலானி வீட்டில் கோடாரை எடுத்து வந்து அக்காவை விரட்டி விரட்டி தாக்கியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?