ஃபர்ஸ்ட் அட்டெம்ட்டில் மிஸ்ஸான கணவர்! 2வது முறையாக ஸ்கெட்ச் போட்டு கதையை முடித்த மனைவி! கள்ளக்காதலால் பயங்கரம்

By vinoth kumar  |  First Published Jul 16, 2024, 3:25 PM IST

கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்துள்ள காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (40). லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (33). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லாவண்யா மாமியார் கலாவதியுடன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். 


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தை இறுக்கி தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி மற்றும் காதலன் கைது செய்யப்பட்டனர். 

கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்துள்ள காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (40). லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (33). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லாவண்யா மாமியார் கலாவதியுடன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கணவர் பிரபுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

அப்போது டிபன் கடையில் இருந்து லாவண்யா வீட்டிற்கு வந்த போது கணவர் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு மாமியாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்த போது பிரபு உயிரிழந்து கிடந்தார். மகனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து வடவள்ளி காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

தாலி கட்டிய கணவர் பிரபுவை கள்ளக்காதலனுடன் சேர்ந்து லாவண்யா கொலை செய்தது தெரியவந்தது. லாவண்யாவின் டிபன் கடைக்கு அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரே கவுடா (39) அடிக்கடி வந்து சாப்பிட்டு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல்  ஏற்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி இருவரும்  உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கணவருக்கு லாவண்யா கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த பிரபு வீடு திரும்பி ஓய்வில் இருந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் உயிர்பிழைத்த அவர் வீடு திரும்பி நிலையில் ஓய்வில் இருந்து வந்தார். அப்போது கள்ளக்காதலன் பைரே கவுடா  அவரை கழுத்தை இறுக்க மனைவி கணவரின் முகத்தை தலையணையால் அழுத்திப்பிடித்ததில் துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். 

click me!