Crime News: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Apr 29, 2023, 11:57 AM IST

கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவனால் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலன் இன்றி கோவை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவிதா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனிடையே தன் மீதான திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்காக கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். 

அப்போது அவரது கணவர் சிவா நீதிமன்ற வளாகத்திலேயே கவிதா மீது ஆசிட்டை ஊற்றினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த கவிதா உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். தாக்குதல் நடத்திய சிவா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

ஊழல் கறை படிந்த காங்., திமுகவின் நடசத்திர பேச்சாளர் கமல்ஹாசன் - வானதி சீனிவாசன் காட்டம்

இந்நிலையில் 80 சதவீத தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கவிதா இன்று திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடற்கூறாய்வுக்குப் பின்னர் கவிதாவின் உடல் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பொன்னியின் செல்வன் படம் பார்த்துக்கொண்டிருந்த பெண் படத்தின் நடுவே திடீரென தற்கொலை

click me!