கடலூர் மீனவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

By Narendran S  |  First Published Apr 28, 2023, 8:12 PM IST

கடலூர் மீனவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 


கடலூர் மீனவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், துறைமுகம் சேனாங்குப்பம் மீனவர்களுக்கும் கடந்த 2018ம் ஆண்டு சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: அவரு சொல்லிதான் பாஜக மாநில நிர்வாகி பிபிஜி. சங்கரை கொலை செய்தோம்.. சரணடைந்தவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்.!

Tap to resize

Latest Videos

undefined

இந்த மோதலில் இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் அதிமுக பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுத்தொடர்பான வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதையும் படிங்க: ஓசூர் காய்கறி சந்தையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; காவல்துறை விசாரணை

இந்த நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதோடு குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!