அவரு சொல்லிதான் பாஜக மாநில நிர்வாகி பிபிஜி. சங்கரை கொலை செய்தோம்.. சரணடைந்தவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்.!

By vinoth kumar  |  First Published Apr 28, 2023, 2:51 PM IST

சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக மாநில நிர்வாகியும், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவருமான  பிபிஜி சங்கர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரணடைந்துள்ளனர்.


சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக மாநில நிர்வாகியும், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவருமான  பிபிஜி சங்கர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரணடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பிபிஜி.சங்கர் (42). இவர் பாஜக எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வருகிறார். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் டிரைவருடன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

Tap to resize

Latest Videos

 கார் பூந்தமல்லி நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது பிபிஜி.சங்கரை திடீரென இரண்டு காரில் வந்த கும்பல் வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசி பிபிஜி.சங்கரை ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். உடனே கொலை கும்பல் தாங்கள் வந்த காரிலேயே அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த  கொலை சம்பவம் தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் சரத், சங்க குமார், ஜெயன், சஞ்சீவ், குணா, சந்தான குமார், தினேஷ், உதயகுமார், ஆனந்த் ஆகிய  9 பேர் எழும்பூர்  13வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர்.

சரணடைந்தவர்கள் அனைவரும் 20 - 25 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட விசாரணையில் வார்டு கவுன்சிலரான சாந்தகுமார் என்பவர் தலைமையில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் சங்கர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள

click me!