சக மாணவரை 108 முறை காம்பஸால் குத்திக் கிழித்த 4ஆம் வகுப்பு மாணவர்கள்!

By SG Balan  |  First Published Nov 27, 2023, 6:25 PM IST

சிறுவனைத் தாக்கிய சக மாணவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.


மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த சண்டையின்போது 4ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை, அவரது வகுப்புத் தோழர்கள் மூன்று பேர் 108 முறை காம்பஸால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தைகள் நலக் குழு (CWC) காவல்துறையிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. நவம்பர் 24 அன்று ஏரோட்ரோம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Tap to resize

Latest Videos

"இந்த வழக்கு அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு சின்ன வயது குழந்தைகளின் வன்முறை நடத்தைக்கான காரணத்தைக் கண்டறிய, காவல்துறையிடம் விசாரணை அறிக்கையை நாங்கள் கேட்டுள்ளோம்" என்று குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் பல்லவி போர்வால் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் தீடீர்னு காணாமல் போன வசதி திரும்ப வந்துருச்சு... பிரைவசிக்கு இன்னொரு கேரண்டி!

இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குழந்தைகள் நலக் குழு ஆலோசனை வழங்குவதோடு, வன்முறைக் காட்சிகளைக் கொண்ட வீடியோ கேம்களை குழந்தைகள் விளையாடுகிறார்களா என்பதைக் கண்டறியவும் முயல்வதாகவும் போர்வால் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 24 அன்று மதியம் 2 மணியளவில் பள்ளியில் நடந்த தாக்குதலில் சிறுவனுக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குற்றம் சாட்டுகிறார்.

"எனது மகன் வீட்டுக்கு வந்ததும் நடந்த கொடுமையை விவரித்தான். உடன் படிக்கும் வகுப்பு தோழர்களே ஏன் இவ்வளவு வன்முறையாக நடந்துகொண்டனர் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. பள்ளி நிர்வாகம் வகுப்பறையின் சிசிடிவி காட்சிகளை எனக்கு வழங்கவில்லை" என்று பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை சொல்கிறார்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை சார்பில் ஏரோட்ரோம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிறுவனைத் தாக்கிய சக மாணவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்... மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!