குழந்தைகள் ஆபாச வீடியோவை பகிர்ந்ததாக 150 பேரை மாட்டிவிட்ட கிறிஸ்டோபர்... அதிர்ச்சியில் போலீஸ்..!

Published : Dec 12, 2019, 12:37 PM ISTUpdated : Dec 12, 2019, 12:38 PM IST
குழந்தைகள் ஆபாச வீடியோவை பகிர்ந்ததாக 150 பேரை மாட்டிவிட்ட கிறிஸ்டோபர்...  அதிர்ச்சியில் போலீஸ்..!

சுருக்கம்

குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து செய்யப்பட்ட திருச்சி பாலக்கரையை சேர்ந்த கிறிஸ்டோபரின் தொடர்பில் பலர் இருப்பதாக தெரிய வந்துள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

சிறுவர், சிறுமியர்களின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற வழக்கில் இவர் இந்தியாவிலேயே முதன்முறையாக கைது செய்யப்படும் நபர். நிலவன், ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து வந்த அவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.  

பின்னர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜை கைது செய்த பாலக்கரை போலீஸார், அவரிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜுடன் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்பியவர்கள் லிஸ்டில் 150 பேர் இருப்பதை காவல்துறையினர் அறிந்து அதிர்ச்சியாகி உள்ளனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!