அம்மாவுடன் இருக்க மாட்டேன்.. வீட்டுக்கு அனுப்பாதீங்க.. தாயின் கள்ளக்காதலனால் 2 ஆண்டுகளாக சீரழிந்த சிறுமி..!

Published : May 03, 2022, 10:28 AM IST
அம்மாவுடன் இருக்க மாட்டேன்.. வீட்டுக்கு அனுப்பாதீங்க.. தாயின் கள்ளக்காதலனால் 2 ஆண்டுகளாக சீரழிந்த சிறுமி..!

சுருக்கம்

பிறகு அவ்வப்போது என்னை மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார். எனது தாயும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். அதனால், அங்கு செல்ல மாட்டேன் எனக்கூறி கதறி அழுதுள்ளார். உடனே சிறுமியுடன், அவரின் அத்தை சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையதத்தில் வந்து புகார் அளித்தார்.

சேலத்தில் 10ம் வகுப்பு மாணவியை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த தாயின் கள்ளக்காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி வேலுபுதுத்தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கோவையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து 10ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், அங்குள்ள ஒரு மில்லில் பகுதி நேரமாக வேலை பார்த்தும் வந்துள்ளார். இச்சிறுமியை அவரின் அத்தை சேலத்திற்கு அழைத்து வந்திருந்தார்.  அப்போது, இனி உனது வீட்டில் தாயுடன் தங்கியிருந்து படிக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அச்சிறுமி, நான் அம்மாவுடன் இருக்க மாட்டேன். அந்த வீட்டிற்கு என்னை அனுப்பாதீர்கள் எனக்கூறியுள்ளார். தொடர்ந்து, தனது தந்தை 8 ஆண்டுக்கு முன் இறந்தபின், அதேப்பகுதியை சேர்ந்த வெள்ளித்தொழிலாளி மணிமாறன் என்பவருடன் தாய் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர், வீட்டிற்கு அடிக்கடி வந்துச் செல்கிறார். 2 ஆண்டுக்கு முன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டார்.

மகளிர் காவல் நிலையதத்தில் புகார்

பிறகு அவ்வப்போது என்னை மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார். எனது தாயும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். அதனால், அங்கு செல்ல மாட்டேன் எனக்கூறி கதறி அழுதுள்ளார். உடனே சிறுமியுடன், அவரின் அத்தை சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையதத்தில் வந்து புகார் அளித்தார். புகாரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவங்கள் பற்றி கூறினார். அதில், தாயின் கள்ளக்காதலன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து 2 ஆண்டுகளாக சீரழித்தது தெரியவந்தது.

போக்சோ சட்டத்தில் கைது

கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை சேலத்தில் தாயுடன் இருந்த சிறுமி, இங்கிருந்து தப்பித்தால் போதும் என கோவையில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்தபடி படிக்க வசதியாக அருகில் உள்ள தனியார் மில்லில் பகுதி நேர வேலைக்கு சென்று வந்திருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடம் கூறுவது என தவித்து வந்த நிலையில், மீண்டும் தாயாருடன் இருக்கும்படி கூறியதும், முடியாது என அத்தையிடம் நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறியிருக்கிறார் என விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, தாயின் கள்ளக்காதலனான மணிமாறனை (31 போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். 

இதையும் படிங்க;- நண்பன்தானே என நம்பிச் சென்ற இளம்பெண்.. வாயில் துணியை வைத்து பொத்தி தோப்புக்குள் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.!

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்