ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவிந்தராஜ் நீலவேணியை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. வெளியே சென்ற கணவர் வீட்டில் வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த கணவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது மனைவியுடன் ரமேஷ் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனுக்கு சரமாரியாக கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள அரசிராமணி பேரூராட்சி பழக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). விவசாயி. இவரது மனைவி நீலவேணி (35). இவருக்கும் செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பைனான்சியர் கோவிந்தராஜ் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுளள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி நீலவேணியை கண்டித்துள்ளார்.
உல்லாசம்
இந்நிலையில், ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவிந்தராஜ் நீலவேணியை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. வெளியே சென்ற கணவர் வீட்டில் வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த கணவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது மனைவியுடன் ரமேஷ் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கத்திகுத்து
இதனையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ரமேஷ் கோவிந்தராஜை தாக்கி கத்தியால் குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற நீலவேணிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த கத்திக்குத்தில் காயமடைந்த ரமேஷ், கோவிந்தராஜை தாக்கி விட்டு தப்பியோடினார். காயமடைந்த கோவிந்தராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரமேஷை தேடிவருகின்றனர்.