
தன் எதிரிகளை போலீசில் சிக்கவைக்க அவர்களுக்கு தன் மனைவியையே விருந்தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதனையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை கற்பழித்த நபர்கள் மற்றும் கணவனையும் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
கணவன் மனைவி பந்தம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்று, எத்தனை ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் இருவரும் ஒத்த மனநிலையில் உறுதியாக நின்று அந்த சூழ்நிலையை கடந்து வரவேண்டும், எத்தனை இக்கட்டுகள் இன்னல்கள் வந்தாலும் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்தல் வேண்டும், தன் திருமண உறவில் வருத்தமாக உள்ளது ஆனால் இங்கே கணவன் எதிரிகளை பழிவாங்க அவர்களுக்குத் தான் தாலி கட்டிய மனைவியை விட்டு கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது அந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிலருடன் கணவனுக்கு மோதல் ஏற்பட்டது, எனவே எப்படியாவது அவர்களைப் பழிவாங்க கணவன் எண்ணினார். ஆனால் பல நாட்கள் கடந்தும் அதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த கணவன் எப்படி அவர்களை பழி வாங்குவது என யோசித்தார். எனவே வாய்ப்பை தானாகவே உருவாக்க முடிவு செய்தார் இந்நிலையில் அவரது ஆழ் மனதில் ஒரு யோசனை தோன்றியது, தனது மனைவியை தனது எதிரிகளை கற்பழிக்க வைத்து அதன்மூலம் அவர்களை சிறையில் தள்ள அவர் முடிவு செய்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மனைவியை பைக்கில் சஹாஸ்வான் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் அந்த நபர்களை அழைத்தார், தனது மனைவியுடன் 2 முறை பாலியல் உறவுகொள்ள வைத்தார்.
பின்னர் அங்கிருந்தவாறு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார், தனது மனைவியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட அவரது மனைவி உண்மை என்ன என்பதைக் கூறினார், அதாவது தங்கள் கிராமத்தில் உள்ள இருவரை போலீசில் சிக்க வைப்பதற்காக எனது கணவர் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறினார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் உதவி காவல் கண்காணிப்பாளர், எஸ்.பி சித்தார்த் வர்மா கூறுகையில் இதுதொடர்பாக கணவன் கைது செய்யப்பட்டு மேலும் பெண்ணை கற்பழித்த இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.